குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நடந்த விழாவில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர். கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர்.பின் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.