உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தைகள் தின விழா..

குழந்தைகள் தின விழா..

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தேவாங்கர் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பார்த்தசாரதி மல்லையா தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.பள்ளிச் செயலர் சரவணன் வரவேற்றார். போகஸ் பப்ளிகேசன் உரிமையாளர் ராஜா பேசினார். தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி செயலாளர் சரவணகுமார், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முனி ஜெயராம் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.* வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார், செயலாளர், டாக்டர் பால்ச்சாமி முன்னிலை வகித்தார். அரிமா சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி