உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாந்தோப்பு ஊருணியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

மாந்தோப்பு ஊருணியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

காரியாபட்டி: காரியாபட்டி மாந்தோப்பில் ஊருணியில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தததால் விபத்து ஏற்படும் அச்சத்தில் அக்கிராமத்தினர் உள்ளனர்.காரியாபட்டி மாந்தோப்பில் 5 ஏக்கர் பரப்பளவில் கருப்பசுவாமி கோயில் முன் மந்தை ஊருணி உள்ளது. மழைக்காலங்களில் நீர் நிரம்பும். அதனை கிராமத்தினர் குடிநீருக்கு பயன்படுத்தினர். கோயில் திருவிழாவின்போது ஊருணியில் தண்ணீர் எடுத்து பொங்கல்வைத்து சாமி தரிசனம் செய்தனர். பின் கிணறுகள்தோண்டப்பட்டு குடிநீர் எடுத்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச் சுவர் முண்டு கற்களை வைத்து கட்டப்பட்டது.ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழுந்தன. தற்போது ஊருணி நிரம்பியும் பயன்பாடு இன்றி உள்ளது. சுற்றுச்சுவர் பாதி இடிந்து ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. சுற்றுச்சுவரில் நடந்து சென்ற போது, சுவர் இடிந்து விழுந்து இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படும் என்பதால் மக்கள்அச்சத்தில் உள்ளனர்.விபத்திற்கு முன் ஊருணியை தூர்வாரி, சுற்றுச்சுவரை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை