உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர் மாணவர்களின் பாதுகாப்பு சிக்கல்

இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர் மாணவர்களின் பாதுகாப்பு சிக்கல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கிடப்பதால் மாணவர்களின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 முதல் 10 வகுப்புகள் உள்ளன. மறவர் பெருங்குடி, போத்தம்பட்டி, சுத்தமடம், சலுக்குவார்பட்டி, கஞ்சம்பட்டி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 220க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2024, டிசம்பர் மாதம் பெய்த தொடர் கன மழையில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் மாலை நேரங்களில் பள்ளியில் உள்ள மரங்களின் கீழ், குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பு இல்லாததால் பள்ளிக்குள் இதுபோன்ற செயல்கள் நடக்க ஏதுவாக உள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை