உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியல், தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் ஆண்டறிக்கையை வாசித்தார்.சென்னை கேப்ஜெமினியின் துணைத் தலைவர், கோர் டெக்னாலஜிஸ் ரிவைட்டலைசேஷன், டிரான்ஸ்பர்மேஷன் பிராக்டிஸ் குளோபல் நிறுவனத்தின் தலைவர் தினகர் ஜேக்கப் செல்வின் பங்கேற்றார்.மேலும் கல்வி, பிற துறைகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர், கல்லுாரி நிர்வாக உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கினர். இதில் நிர்வாகிகள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். இணைப் பேராசிரியர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை