உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி 31வது ஆண்டு விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். டீன் சிவரஞ்சனி வரவேற்றார். ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பெங்களூர் அல் ஸ்டாம் நிறுவனத்தின் பொறியியல் தர இயக்குனர் சண்முகசுந்தரம் பேசினார். கல்வியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், இணை பாடத்திட்டம், கூடுதல் பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டது. பேராசிரியர்கள், சிறந்த சேவை செய்த பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. டீன்கள் மோகன் லட்சுமி, ஷானவாஸ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை