உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., வள்ளி கண்ணு, எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசி முருகன், கல்லுாரி தலைவர் மயில் ராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் செல்லத்தாய் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஆயிரத்து 412 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.பின் அவர் பேசுகையில்: தமிழகத்தில் தான் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிகமாக உள்ளனர். கல்வியை மாணவர்கள் விடாது படிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார். செயலாளர் சங்கரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி