உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி

பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி

திருச்சுழி: திருச்சுழி அருகே இயற்கை உபாதைக்காக சென்ற கல்லுாரி மாணவியை பாம்பு கடித்ததால் இறந்தார்.திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் -மகள் அழகுபாப்பா 19, இவர் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்துள்ளார்.இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற போது அங்கிருந்த கண்ணாடி விரியன் பாம்பு மாணவியை கடித்தது. இதில் மாணவி மயக்கம் அடைந்தார். உடன் அவரை அக்கம்பக்கத்தினர் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கு இடையிலேயே மாணவி கண் பார்வை இழந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் மாணவி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை