உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

நகராட்சி அனுமதியின்றி கட்டிய வணிக வளாகத்திற்கு சீல்

விருதுநகர்: விருதுநகரில் நகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகக் கட்டடத்திற்கு நகரமைப்பு பிரிவினர் பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் வேலாயுதமடை ஊருணி உள்ளது. அதன் அருகில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மென்ட் உடன் கூடிய 2 மாடி வணிக வளாக கட்டடம் கட்டும் பணி நடந்தது. இதற்கு நகராட்சியில் முறையான வரைபட அனுமதி ஏதும் பெறவில்லை.எனவே, இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர், நகராட்சியில் புகார் தெரிவித்தனர். அதன் பிறகே, நகரமைப்பு பிரிவினர் கட்டடம் கட்டுபவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இருந்தபோதும், பணியை நிறுத்தவில்லை. தற்போதுகட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் அதை பலருக்கு வாடகைக்கு விடவும் முன்னேற்பாடுகள் நடந்து வந்தது. மின்சார வாரியத்தினர், மின் இணைப்பு வழங்கவும் முயற்சிகளைச் செய்தனர். இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நகரமைப்பு ஆய்வாளர் ரூபா, முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை சீல் வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி