உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்து வரும் வணிக வளாகம்

சேதமடைந்து வரும் வணிக வளாகம்

காரியாபட்டி: காரியாபட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வணிக வளாக கட்டடம் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் அப்புறப்படுத்தி புதிய கட்டடங்கள் கட்ட வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டி பேரூராட்சியில் வருவாயை பெருக்க 20 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருப்புக்கோட்டை ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே 50க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல ஏதுவாக இருந்தது. இந்நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கட்டடங்கள் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே கூரை பெயர்ந்து விழுகின்றன. மழை நேரங்களில் கசிவு ஏற்பட்டு வருவதால், ஆவணங்கள், பொருட்கள் சேதமாகிறது. எப்போது இடிந்து விழுமோ என வணிகர்கள், அலுவலகமாக பயன்படுத்தி வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.உள்பக்க கடைகள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிறுநீர் கழிப்பிடமாக மாறி, சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. துர்நாற்றத்தால் அப்பகுதியில் கடை நடத்துபவர்கள் முகம் சுளிக்கின்றனர். குடிமகன்கள் தொல்லையால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. இது ஒரு புறம் இருந்தாலும், இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதால், விபத்திற்கு முன் கட்டடத்தை அப்புறப்படுத்தி, நவீன முறையில் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை