மா விவசாயிகளுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு
ராஜபாளையம் : ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 26 லட்சம் 155 விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதியில் மா மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.2023 நிதி ஆண்டில் மாமரங்கள் பூக்கும் காலத்தில் சாரல் மழை பெய்ததால் பூக்கள் அழுகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் இழப்பீடு குறித்து கோரிக்கை விடுத்தனர்.இதனை அடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மா மரங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட 144.45 ஹெக்டேர் மா பயிர்களுக்கு இழப்பு வழங்குவதற்காக ரூ. 26 லட்சத்து 190 ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 185 விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.