சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
சிவகாசி : சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லுாரி நிர்வாகிகள் , தொழில்துறையினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் டி.எஸ்.பி., பாஸ்கர் பேசியதாவது, சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், டூ வீலர்கள் உட்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் முக்கிய ரோடுகளில் கடும் போக்குவரத்தினர் நெரிசல் ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் வாகனங்கள் இவ்வழியாக வருவதை தவிர்க்க வேண்டும்.காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மேம்பால பணிகள் நிறைவடையும் வரை பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் வரை, சற்று துாரமாக இருந்தாலும் மக்கள் மாற்றுப்பாதை வழியாக சென்று காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், நிர்வாகிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், வர்த்தக சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.