ஸ்ரீவி.,யில் நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் தீவிர விசாரணை
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு ரோட்டிலுள்ள ஆட்டுப்பண்ணையில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.ஆட்டுப்பண்ணையைச் சேர்ந்த சூர்யா 29, கூலித் தொழிலாளி. இவரை மம்சாபுரத்தை சிலர் தாக்கியதில் காயமடைந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரிக்க சென்றனர்.அப்போது அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். விருதுநகர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.