மேலும் செய்திகள்
நீலம்பூர் ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
16-Dec-2024
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மதுரை- - கொல்லம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததில் கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.திருப்பூரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் 45, டிரைவர். இவரது மனைவி மலர்விழி 37. இருவரும் நேற்று முன்தினம் ராஜபாளையத்திற்கு உறவினர் வீட்டுக்கு, காரில் வந்தனர்.. பின்னர் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டு திருப்பூருக்கு சென்றனர்.நேற்று அதிகாலை 12:45 மணிக்கு மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் நத்தம் பட்டி வழி விடு முருகன் கோயில் அருகே வரும்போது காரில் கேஸ் காலியானதால் நின்றுவிட்டது. பின்னர் அருகில் இருந்த பங்க்கில் பெட்ரோல் வாங்கி காரில் நிரப்பி புறப்பட்டனர்.சுமார் அரை கிலோ மீட்டர் துாரம் சென்ற நிலையில் காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் இருவரும் உடனடியாக காரை விட்டு இறங்கினர். அப்போது கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது. வத்திராயிருப்பு தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் குழுவினர் தீயை அணைத்தனர். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.
16-Dec-2024