உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கவரிங் நகையை அடகு வைத்து ரூ.2.42 லட்சம் மோசடி

 கவரிங் நகையை அடகு வைத்து ரூ.2.42 லட்சம் மோசடி

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் அடகு வைத்த கவரிங் நகையை ரூ.2.42 லட்சம் கொடுத்து திருப்பி மோசடி செய்தது தொடர்பாக பெண், பைனான்ஸ் நிறுவன மேலாளர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். வத்திராயிருப்பை சேர்ந்தவர் முருகக்கனி 51, நகைக்கடை உரிமையாளர். இவரிடம் சேது நாராயணபுரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் 42, என்பவர் 48 கிராம் கொண்ட 4 தங்க வளையல்களை, தான் மினி முத்து பைனான்ஸில் அடகு வைத்திருப்பதாகவும் அதனை மீட்டு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அவர் பைனான்ஸ் நிறுவன மேனேஜர் அருண் கோபி 32, என்பவரிடம் நகையை பற்றி கேட்டபோது, அடகு வைக்கப்பட்ட நகை ஹால்மார்க் நகை தான் என கூறியுள்ளார். இதனையடுத்து அடகு வைக்கப்பட்ட நகையை,ரூ.2 .42 லட்சம் செலுத்தி முருகக்கனி மீட்டுள்ளார். பின்னர் நகையின் தரத்தை பரிசீலித்த போது வளையல்கள் கவரிங் என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பணத்தை திரும்ப கேட்ட போது மாரியம்மாள் தர மறுத்தார். வத்திராயிருப்பு போலீசார், மாரியம்மாள் 42, அவருக்கு உடந்தையாக இருந்த சண்முகம் 60, பைனான்ஸ் நிறுவன மேனேஜர் அருண் கோபி ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ