உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பசுவை வெட்டி இறைச்சி திருட்டு

 பசுவை வெட்டி இறைச்சி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், கொந்தராயன் குளத்தை சேர்ந்தவர் மாகாளி, 40; இவர் மங்கலத்தில் அரசு மாணவர் விடுதி சமையலர். இவ ருக்கு சல்லிபட்டி செல்லும் சாலையில் வயல் உள்ளது. அங்கு மாட்டுத்தொழுவம் அமைத்து பசு மாட்டை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மாட்டுக்கு உணவு வைத்துவிட்டு சென்ற நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு மீண்டும் வந்து பார்த்தார். அப்போது, மாடு வெட்டி கொல்லப்பட்டு, கறி, எலும்புகள் எடுக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலின் இதர பகுதி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாகாளி புகாரின்படி, கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி