உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியில் கிரிக்கெட் போட்டி

திருச்சுழியில் கிரிக்கெட் போட்டி

திருச்சுழி: திருச்சுழியில் பழைய மாணவர்களால் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.திருச்சுழி அரசு பள்ளியில் 1994 ல், படித்த மாணவர்கள் பலர் தலைமைச் செயலகம், போலீஸ், தனியார் நிறுவனங்கள், பல்வேறு அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளி நாட்களில் பல்வேறு ஊர்களில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள், ஜீனியஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் உடன் இணைந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. முதல் பரிசினை அருப்புக்கோட்டை அன்னை ஹோம், 2ம் பரிசு மதுரை ரியாஸ் குழுவினர் வென்றனர். சென்னை டி.எஸ்.பி., சச்சிதானந்தம், பள்ளி மேலாளர் பெரியண்ணராஜன், தலைமை ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை