உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் திரியும் கால்நடைகளால் பாதிப்பு

ரோட்டில் திரியும் கால்நடைகளால் பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ரோட்டில் தெரியும் பராமரிப்பற்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் முடங்கியார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, தென்காசி ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, சத்திரப்பட்டி ரோடு என முக்கிய சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை நகர்ப்புற உட்புற சாலைகள் அனைத்திலும் மாடுகள் திரிந்து வருகின்றன. பகல் இரவு என எந்த நேரமும் இவை உலா வருவதுடன் ரோட்டின் ஒரு பகுதியை தங்குமிடமாக மாற்றி உறங்குகின்றன. இதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.பல நேரங்களில் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வாகனங்களில் மோதுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் உத்தரவை காட்டில் பறக்க விட்டுள்ளனர். இதனால் கால்நடை உரிமையாளர்கள் எந்தவித அச்சமின்றி தொடர்ந்து கால்நடைகளை ரோட்டில் திரியவிடுவதுடன் பலரது உயிர் பலிகளுக்கு காரணமாகி வருகின்றனர். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி