உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கே.மடத்துப்பட்டியில் சேதமான சேதமான ரேஷன் கடை கட்டடம்

கே.மடத்துப்பட்டியில் சேதமான சேதமான ரேஷன் கடை கட்டடம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்து பட்டியில் ஊருக்கு மத்தியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் கே.மடத்து பட்டியில் ஊருக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. இக் கட்டடம் சேதம் அடைந்த நிலையில் ரேஷன் கடைக்கு என வேறு கட்டடம் கட்டப்பட்டு மாற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் பழைய ரேஷன் கடை கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து அவ்வப்போது சிமெண்ட் பெயர்ந்து விழுகிறது. இக்கட்டடத்தினை கடந்து தான் பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். சிறுவர்கள் இதன் அருகிலேயே விபரீதம் அறியாமல் விளையாடுகின்றனர். மேலும் சேதமடைந்த கட்டடத்தின் அருகே இ சேவை மையம், குடி யிருப்புகள் உள்ளன. தவிர கட்டடம் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் கூடார மாகவும் மாறிவிட்டது. எனவே சேதம் அடைந்த இந்த கட்டடத்தை உடனடி யாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை