உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலவீனமாக சுவர்கள் விழும் நிலையில் இருப்பதால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.சூலக்கரையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி மழைக்காலத்தில் சிறுபகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து பலவீனமாக இருந்த அடுத்தடுத்த சுற்றுச்சுவர்களும் சில நாட்களில் இடிந்தது.தற்போது மற்ற சுவர்களும் பலவீனமாகவே உள்ளது. இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்கள் பகுதிகளில் புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வளாகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வலுவிழந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்து அசாம்பாவிதம் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. இது குறித்து பல முறை உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை