உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடையனேரி அரசு பள்ளியில் சேதமான கட்டடங்கள்

நடையனேரி அரசு பள்ளியில் சேதமான கட்டடங்கள்

சிவகாசி: சிவகாசி அருகே நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 700 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பெரும்பான்மையான கட்டடங்கள் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதனால் வகுப்பறையில் அமர்ந்து படிக்க மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.இங்குள்ள ஆய்வகம் சேதம் அடைந்த நிலையில் தற்போது மராமத்து பணிகள் நடந்தது. ஆனால் சேதமான வகுப்பறை கட்டடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் இதில் படிக்கும் மாணவர்கள் அச்சத்துடனே உள்ளனர்.இப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள்நபார்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டும் இடவசதி இல்லாததால் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. எனவே சேதம் அடைந்த கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை