மேலும் செய்திகள்
நகருக்குள் அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்கள்
06-May-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளின் வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வந்த நிலையிலும், குடிநீர் குழாய் இணைப்பிற்காக ரோடுகள் தோண்டப்பட்டு மீண்டும் சரியான முறையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படாமல் உள்ளது.இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, நகரின் அனைத்து தெருக்களிலும் மேடு, பள்ளமாக காணப்படும் பேவர் பிளாக் ரோடுகளை மீண்டும் தோண்டி எடுத்து சமப்படுத்தி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
06-May-2025