உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு

பட்டாசு விபத்தில் பலி 4ஆக உயர்வு

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே விஜயகரிசல்குளத்தில் பொன்பாண்டி என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிகிச்சையில் இருந்த மாரியம்மாள் 44, இறந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. பொன்பாண்டி வீட்டில் அனுமதியின்றி சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. ஆக., 9ல் வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் 19, சண்முகத்தாய் 55, முத்துலட்சுமி 70, ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய கரிசல் குளம் மாரியம்மாள் 44, சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை