உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்கள் கடித்து மான் பலி

நாய்கள் கடித்து மான் பலி

திருச்சுழி : திருச்சுழி அருகே நாய்கள் விரட்டி கடித்ததில் மான் பலியானது.திருச்சுழி அருகே உள்ள காட்டுப்பகுதிகளில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. அவ்வப்போது இரை தேடி ஊருக்குள் வரும் போது தெரு நாய்கள் அவற்றை விரட்டி கடிக்கின்றன. சில சமயங்களில் வாகனங்களில் அடிபட்டும் பலியாகின்றன.நேற்று முன்தினம் இரவு திருச்சுழியில் இருந்து கமுதி செல்லும் ரோட்டில் பச்சேரி கிராம பகுதியில் ஒரு பெண் புள்ளிமான் ஊருக்குள் வந்தது. இந்தப் பகுதியில் உள்ள தெரு நாய்கள் மானை விரட்டி கடித்ததில் பலியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் பலியான மானை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை