உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செம்பட்டியில் பயன்பாட்டிற்கு வராத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

செம்பட்டியில் பயன்பாட்டிற்கு வராத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் கட்டி முடித்து பல மாதங்களாகியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது செம்பட்டி ஊராட்சி. ஊரை சுற்றியுள்ள தொட்டியாங்குளம், புலியூரான், தென்பாலை, இலங்கிப்பட்டி, குறிஞ்சாக் குளம், தென்பாலை உள்ளிட்ட கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெற 5 கி.மீ., தூரம் உள்ள கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும். அவசர சிகிச்சை என்றால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், செம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 1 கோடி 20 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. சொந்த ஊரிலேயே மருத்துவ சிகிச்சை பெறலாம் என்று எண்ணி இருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் 5க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை