உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இழப்பீடு வழங்குவதில் தாமதம் 2வது முறையாக அரசு பஸ் ஜப்தி

 இழப்பீடு வழங்குவதில் தாமதம் 2வது முறையாக அரசு பஸ் ஜப்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் பஸ் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் படி, இரண்டாம் முறையாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் 36, பெயிண்டர். 2015 மே 18ல் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஸ்டாப்பில் இருந்து பஸ் ஏறும்போது தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்தார். அவரது மனைவி தமிழ்ச்செல்வி, குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ரூ.14.34லட்சத்தை மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அரசு போக்குவரத்து கழகம் நிறைவேற்றவில்லை. இதனையடுத்து தமிழ்செல்வி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி மனு தாக்கல் செய்தார். இதில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து உடனடியாக ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு, மீதியை அடுத்து தருவதாக கூறி பஸ்சை, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீட்டு சென்றனர். இந்நிலையில் பாக்கி இழப்பீடு தொகையை நேற்று வரை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தரவில்லை. இதனையடுத்து நேற்று மாலை, சேலத்தில் இருந்து தளவாய் புரம் சென்ற அரசு பஸ்சை, இரண்டாம் முறையாக நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ