108 ஆம்புலன்சில் பிரசவம்
நரிக்குடி: நரிக்குடி சேதுராயனேந்தலைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி மகாதேவி 22. நேற்று முன்தினம் பிரசவ வலியால் துடித்தார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய 108 ஆம்புலன்சில் ஏற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிக வலி ஏற்படவே செல்லும் வழியில் சுந்தர நடப்பு அருகில் நிறுத்தினர். அவசரகால மருத்துவ உதவியாளர் விஜயலட்சுமி, டிரைவர் சின்ன வெள்ளை உதவியுடன் பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மருத்துவ உதவியாளர், டிரைவரை பாராட்டினார்.