உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

விருதுநகர்: இருபத்திரண்டு ஆண்டுகள் டாஸ்மாக்கில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் வேண்டுமென்பதுட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட இணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, நாகராஜ், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், பொருளாளர் பொன்னுசாமி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் தேவா, பொருளாளர் செல்லச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி