மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
11-Jul-2026
விருதுநகர்: சமூக வலைதளங்களில் அங்கன்வாடி ஊழியர்களின் பணியையும், பிறப்பையும், தன்மானத்தையும் இழிவுபடுத்திய கவுசல்யா என்பவர் மீது போலீஸ்துறை கைது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுரவத் தலைவர் இந்திராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கண்ணன் முத்தரசு பேசினர். மாவட்டப் பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.
11-Jul-2026