ஆர்ப்பாட்டம்
சிவகாசி: மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் உட்பட அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் குருவையா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் திருப்பதி, செயலாளர் குமார் பொருளாளர் பிரபாகரன், நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.