மேலும் செய்திகள்
ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
16-Oct-2026
ராஜபாளையம்: தமிழக அரசின் வெற்றி பயண திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு., அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மகளிர் அமைப்பாளர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். வெற்றி பயண இலவச திட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கை விடுவதுடன், தொழிலாளர் நல வாரியம் மூலம் பண்டிகை கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
16-Oct-2026