உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புள்ளியியல் துறை ஆண்டு விழா

புள்ளியியல் துறை ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய புள்ளியல் அலுவலக ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் துணை மண்டல புள்ளியியல் அலுவலகம் சார்பில் கிருஷ்ணன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மின் விளம்பர பலகை திறப்பு விழா நடந்தது. துணை மண்டல உதவி இயக்குனர் ரத்தினம் தலைமை வகித்தார். முதுநிலை புள்ளியியல் அலுவலர் சேது மகேஸ்வரன் வரவேற்றார். புள்ளியியல் துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தரி, வேளாண்மை துறை உதவி இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் விளம்பர பலகையை திறந்து வைத்து பேசினர். விழாவில் மத்திய, மாநில அரசு புள்ளியல் துறை அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயம், வருவாய்த்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை