உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குண்டாற்றில் வசதிகள் இல்லை தர்ப்பணம் செய்த பக்தர்கள் அதிருப்தி அருப்புக்கோட்டையில் அதிகாரிகள் தடுப்பு

குண்டாற்றில் வசதிகள் இல்லை தர்ப்பணம் செய்த பக்தர்கள் அதிருப்தி அருப்புக்கோட்டையில் அதிகாரிகள் தடுப்பு

திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். இதே போன்று, அருப்புக்கோட்டையில் பட்டாபிராமர் கோயிலில் பல ஆண்டுகளாக தர்ப்பணம் செய்து வந்தவர்களை கோயில் அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். * திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்வது காசி, ராமேஸ்வரத்தில் செய்வது போன்றதற்கு இணையானது. ஆடி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய வெளியூர்களில் இருந்து மக்கள் இங்கு வருவர். இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் ஊராட்சி செய்து தருவது இல்லை. கழிப்பறை வசதி இல்லை. திறந்தவெளியில் குளிக்கும் தொட்டி அமைந்துள்ளதால் பெண்கள் குளிக்க சங்கடப்படுகின்றனர். பெண்கள் உடை மாற்ற தனியாக அறை இல்லை. தர்ப்பணம் செய்பவர்களுக்கு கரையில் ஒரு மண்டபம் இல்லை. இதனால் பக்தர்கள் ஆற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. * அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தர்ப்பணம் செய்து வந்தனர். கடந்தாண்டு கோயில் அதிகாரிகள் இங்கே தர்ப்பணம் செய்யக்கூடாது என தடுத்த நிலையில், பக்தர்கள் போராடி தர்ப்பணம் செய்தனர். நேற்று தர்ப்பணம் செய்ய வந்தவர்களை இங்கே வரக்கூடாது என கோயில் அலுவலர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கோயில் அலுவலர் ராஜா : முறைப்படி டிக்கெட் பெற்று தர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில் ராமர் கோயிலில் தர்ப்பணம் செய்யக்கூடாது என இந்து அறநிலையத்துறை உதவி இயக்குனருக்கு ஆட்சேபணை கடிதம் வந்ததால் யாரையும் அனுமதிக்க இயலவில்லை. பக்தர்களை நலம் கருதி பாரம்பரியமாக செயல்படும் வரும் நிகழ்வுகளை இந்து அறநிலையத்துறையினர் முறைப்படி அனுமதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை