மேலும் செய்திகள்
ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி
10-Oct-2024
காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடை பகுதியில் பெய்யும் மழை நீர் செல்ல வழியின்றி, ஊருக்குள் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர். மழை நீரை வெளியேற்ற மதுரை -அருப்புக்கோட்டை ரோட்டின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மழை நீர் தெற்காற்றில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து பாலம் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டது. ஜல்லிக்கற்கள் சிதறி கிடந்தன.வாகனங்களின் டயர்களை பதம் பார்த்தன. டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நின்றது. மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை ஒட்டி பள்ளமான பகுதியில் பாலம் இருந்ததால் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியாது. தொடர் விபத்து நடந்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக தார் கலவை போட்டு ரோடு சீரமைக்கப்பட்டது. தற்போது வாகன ஓட்டிகள் எளிதாக, பாதுகாப்பாக சென்று வர முடிகிறது.
10-Oct-2024