உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் குருதி பிரித்தெடுப்பு மையம் சிவகாசி அரசு மருத்துவமனையில் துவக்கம்

மாவட்டத்தில் குருதி பிரித்தெடுப்பு மையம் சிவகாசி அரசு மருத்துவமனையில் துவக்கம்

சிவகாசி: மகப்பேறுவின் போது தேவைப்படும் தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்களை பிரித்து சரியாக வழங்கும் வசதியான குருதி பிரித்தெடுப்பு மையம் தாலுகா மருத்துவமனைகளில் முதல் முறையாக சிவகாசி மருத்துவமனையில் துவக்கப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு குளித்தலையில் இருந்து இதற்கான காம்போனென்ட் செப்ரேட் மிஷின் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கானஉதிரி பாகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் கலெக்டர் ஜெயசீலன் மூலம் சி.எஸ்.ஆர்., நிதியிலிருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக ரூ. 28 லட்சத்தில் புதிதாக மெஷின்கள், உதிரி பாகங்கள் வாங்கப்பட்டு குருதி பிரித்தெடுப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் மகப்பேறுவின் போது ரத்தத்தில்இருந்து தேவையான தட்டணுக்கள் வெள்ளையணுக்கள், சிவப்பணுக்களை சரியாகப் பிரித்து கொடுக்க முடியும் என்பதால் மகப்பேறுவில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். விருதுநகர் மாவட்டத்திலேயே தாலுகாவில் முதல்முறையாக சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு மையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியில் இணை இயக்குனர் மருத்துவம் ஊரக நலப் பணிகள் பாபுஜி வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் குணசேகரன், சிவகாசிஅரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அய்யனார், குருதி மைய மருத்துவ அலுவலர் விஜயகுமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை