மேலும் செய்திகள்
மாவட்ட வாலிபால் போட்டி
25-Oct-2025
சிவகாசி: சிவகாசியில் விருதுநகர் மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம், ஓய்.ஆர்.டி.வி. டென்னிஸ் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய பகுதியில் இருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட டேபிள்டென்னிஸ் கழக தலைவர் செல்வராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஹரிஸ்அகர்வால் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுரேஷ்பாபு வரவேற்றார். 11, 13, 15, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒற்றையர், இரட்டையர் என நாக் அவுட் முறையில் நடந்தது. ஒய்.ஆர்.டி.வி. பள்ளி முதல்வர் முரளி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் வைரமுத்து நன்றி கூறினார்.
25-Oct-2025