உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தி.மு.க. கொடி கம்பங்கள் அகற்றம்

தி.மு.க. கொடி கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்துார் : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு ரோடுகளில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன் தினம் அறிவுறுத்தி இருந்தார்.நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துார் கைகாட்டி பஜாரில் உள்ள தி.மு.க., கொடி கம்பத்தை நகரச் செயலாளர் அய்யாவு பாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அகற்றினர். கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி 33 வார்டுகளில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படும் என அய்யாவு பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி