மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க., வினர் எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகராட்சி தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, கவுன்சிலர் மதியழகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சிவகாசியில் மாநகர தி.மு.க., செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா, மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, பகுதி செயலாளர் காளிராஜன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அருப்புக்கோட்டையில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகரச் செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், நகராட்சி துணை தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.