உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்கள் இனப்பெருக்கம் தடுப்பு ஊராட்சி பகுதிகளில் எதிர்பார்ப்பு

நாய்கள் இனப்பெருக்கம் தடுப்பு ஊராட்சி பகுதிகளில் எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் நடைபெற்று வரும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகள் ஊராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர். ராஜபாளையம் நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பராமரிப்பற்ற தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொற்று பாதிப்பு, குழந்தைகள் பெண்களை விரட்டி கடிப்பது, வாகன ஓட்டிகளுக்கு நேரும் விபத்தினால் உயிர் பலி என பல்வேறு சிக்கல்கள் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் பல்கி பெருகி உள்ள நாய்களை தடுப்பூசி பணிகள் முடிந்து தற்போது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர் பகுதியை ஒட்டியுள்ள ஊராட்சி, கண்மாய் உள்ளிட்ட புதர் பகுதிகளிலும் அதிகரித்து காணப்படும் நாய்களையும் கட்டுப்படுத்த ஊராட்சி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக நகரை ஒட்டியுள்ள கிருஷ்ணாபுரம், மேலப்பாட்ட கரிசல்குளம், தெற்குவெங்காநல்லுார், வடக்கு வெங்காநல்லுார், இனாம் செட்டிகுளம் போன்ற ஊராட்சி பகுதிகளிலும் நாய் கருத்தடை பணிகளை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை