மேலும் செய்திகள்
கிராம சபை கூட்டம் 23ம்தேதி நடத்த உத்தரவு
13-Nov-2024
குடிநீர் திட்டத்திற்காக சேதப்படுத்தப்பட்ட ரோடு
24-Oct-2024
நரிக்குடி: ரோடு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, 6 மாதங்களாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டதால் கொட்டக் காட்சியேந்தல் உள்ளிட்ட கிராமத்தினர் சிரமத்தில் உள்ளனர். நரிக்குடி இருஞ்சிறை - மானாமதுரை ரோடு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் சென்ற குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. 6 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. கொட்டக்காட்சியேந்தல், கணையமரித்தான், பூவாக்கன்னி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தாமிரபரணி, திருப்பாச்சேத்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை. குடிநீரை ஒரு குடம் ரூ. 12க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.ஆழ்துளை கிணறுகள் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் உப்புத்தண்ணீராக இருந்து வருகிறது. இதனை குடிநீருக்கு, சமையலுக்கு பயன்படுத்த முடியவில்லை. பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருவதால், உடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
13-Nov-2024
24-Oct-2024