உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு

5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஸ்ரீவி., மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வீடுகளுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை, சீரான முறையில் போதுமான அளவு குடிநீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 14 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் உள்ளது.தற்போது உள்ளூர் நீர் ஆதாரமான செண்பகத்தோப்பு பேயனாற்று கிணறுகள் மூலமும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதில் அடிக்கடி குழாய் உடைப்பின் காரணமாக குடிநீர் சப்ளை சீரான நாட்களில் நடப்பதில்லை. குறைந்தபட்சம் 5 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 நாட்கள் இடைவெளியில் தான் குடிநீர் சப்ளை வழங்கப்படுவதால் போதிய அளவிற்கு குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, நகராட்சி அதிகாரிகள் குடிநீர் விநியோகப் பிரச்சனையில் தொடர் கண்காணிப்பும், நடவடிக்கையும் மேற்கொண்டு 5 நாட்களுக்கு ஒரு முறை போதுமான அளவிற்கு குடிநீர் சப்ளை அனைத்து வார்டுகளுக்கும் முறையாக கிடைக்க செய்ய வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை