மேலும் செய்திகள்
'மகளிர் குழு பொருட்களை ஆன்லைனில் விற்கணும்'
16-Mar-2025
விருதுநகர் : பெண்களுக்கான சுதந்திரம் அவர்களுக்கான பெருளதார வலிமை தான் என சுய உதவி குழுக்களுக்கான சந்தைப்படுத்தும் நிகழ்வை துவக்கி வைத்து கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.விருதுநகரில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தும் வர்த்தக நிபுணர்கள் (வாங்குவோர் மற்றும் விற்போர்) சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி துவக்கி பேசுகையில், “ஒவ்வொரு பெண்ணும் சுய தொழில் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் லாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு வர வேண்டும். பெண்களுக்கான சுதந்திரம் என்பது அவர்களின் பொருளாதார வலிமைதான். தனது கையில் இருக்கும் பணத்தை தானே செலவு செய்வதற்கும், தனது குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும், விருப்பமானவற்றை வாங்குவதற்கும் அவர்களுக்கு அந்த பணத்தின் மீது செல்வாக்கு இருக்க வேண்டும், என்றார்.68 சுய உதவிக்குழுக்கள் 150க்கும் மேற்பட்ட தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தினர். குழுக்களுக்கும், கொள்முதலாளர்களுக்கும் முதற்கட்டமாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. திட்ட இயக்குநர் ஜார்ஜ் மைக்கேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Mar-2025