உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் பஸ் மோதி மூதாட்டி பலி

டூவீலரில் பஸ் மோதி மூதாட்டி பலி

விருதுநகர்: விருதுநகர் முத்துதெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் 81. இவரின் மனைவி தையல் நாயகி 72. இவர்கள் இருவரும் அருப்புக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு விருதுநகர் நோக்கிடூவீலரில் நேற்று காலை 10:20 மணிக்கு அருப்புக்கோட்டை ரோட்டில் வந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் தையல் நாயகி சம்பவஇடத்திலேயே பலியானார். காயமடைந்த கணவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை