உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொந்த அலைபேசியில் ரீடிங் பதிவு மின் கணக்கீட்டாளர் அதிருப்தி

சொந்த அலைபேசியில் ரீடிங் பதிவு மின் கணக்கீட்டாளர் அதிருப்தி

விருதுநகர்:தமிழகத்தில் அலைபேசியில் மின் கணக்கீடு பணியை தொடர வற்புறுத்துவதால் ஊழியர்கள் புலம்புகின்றனர்.மின் கணக்கீட்டாளர்களுக்கு ரீடிங் எடுக்க மிஷின் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதை பெற்றுக் கொண்டு, அதற்கு பதில் அவரவர் அலைபேசியை கொண்டு கணக்கெடுக்கவும், ஒரே பெயர், அலைபேசி எண்ணில் பல இணைப்புகள் இருந்தால் அதை கணக்கெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு பல இணைப்புகள் இருந்தால் ஒன்றை தவிர மற்றவற்றிற்கு நுாறு யூனிட் இலவசம் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு, ரீடிங் கணக்கீடு என இரண்டையும் பதிவு செய்ய அலைபேசியில் ப்ளூடூத், ஜி.பி.எஸ்., ஆன் செய்து வைக்க வேண்டி உள்ளது. இதனால் 2 மணி நேரத்தில் அலைபேசியில் சார்ஜ் இறங்கி விடுகிறது. மீண்டும் சார்ஜ் போட்ட பின்பே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த பணிக்கு என மின்வாரியம் தனியாக அலைபேசி எதுவும் வழங்கவில்லை. அவரவர் அலைபேசியை பயன்படுத்த வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. எனவே சொந்த அலைபேசிகளை பயன்படுத்த நிர்பந்திக்காமல், புதிய அலைபேசி வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !