உள்ளூர் செய்திகள்

வர்த்தக கண்காட்சி

சாத்துார் : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் 3 நாள் வர்த்தக கண்காட்சி நடந்தது. முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார்.மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் கிறிஸ்டோபர் கலந்துகொண்டு பேசினர். வணிகவியல் துறை தலைவர் முத்து மணி வரவேற்றார். கண்காணிப்பாளர் குணசேகரன் நன்றி கூறினார். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், கல்லுாரி வணிகவியல் துறை இணைந்து இக்கண்காட்சியை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ