உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய திட்டம் கொண்டு வர எதிர்பார்ப்பு

புதிய திட்டம் கொண்டு வர எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் நாட்கள் இடைவெளி அதிகரித்து வருவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க புதிதாக குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. மேலும் ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.இந்நிலையில் 2011ல் செயல்படுத்தப்பட்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் போதுமான குடி நீர் கிடைக்காததால் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து மக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உள்ளூர் நீராதாரமான செண்பகத் தோப்பு பேயனாற்றில் உள்ள கிணறுகள் அடிக்கடி சேதமடைந்து, குடிநீரும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் குடம் 12 ரூபாய்க்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு என தனியாக தாமிரபரணி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்களின் குடிநீர் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கென புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் - ரவிக்கண்ணன், நகராட்சி தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி