பணிமனைகளில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ முகாம்; மருத்துவ செலவுகளுக்கான பிடித்தம் நிறுத்தப்படுவதால்
மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்த பஸ்களின் எண்ணிக்கை 462, வரையறுக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இங்கு உள்ள மொத்த பணியாளர் களின் எண்ணிக்கை 2430. இவற்றில் பெரும்பாலானோர் 40 வயதை கடந்த தொழிலாளர்களாக இருப்பதால் பலருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்புரை பாதிப்புகள் குறித்து தொழிலாளர்கள் பெரிய அளவில் பரி சோதனை எதுவும் செய்து கொள்வதில்லை. மாறாக பாதிப்புகள் அதிகரித்து உடலில் பிரச்னை ஏற்படும் போது தான் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை, சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஆண்டிற்கு ஒரு முறை கண்சிகிச்சை முகாம் பெயரளவிற்கு மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான இன்ஸ் சூரன்ஸ் பிடித்தம் இருப்பதால் மருத்துவமனைகளில் இலவசமாக பரி சோதனை, சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசு போக்குவரத்து ஊழியராக இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து மருத்துவ செலவுக்கான பிடித்தம் நிறுத்தப் படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரிகள், தனியார் அமைப்புகள் நடத்தும் இலவச மருத்துவ முகாம்களுக்கு அரசு போக்குவரத்து ஓய்வூதி யர்கள் சென்று பரி சோதனை செய்து சிகிச்சை பெற வேண்டி நிலை நீடிக்கிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனைகளில் ஓய்வூதியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை மூலமாக பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இதன் மூலம் பாதிப்புகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு உடனடி யாக சிகிச்சை பெற்று ஓய்வு காலத்தில் சிரமமின்றி இருக்க முடியும். எனவே விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் 9 பணிமனை களில் ஓய்வூதியர் களுக்கான மருத்துவ முகாம் நடத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.