கால்நடைகள் இன்சூரன்சிற்கு கூடுதலாக நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு
விருதுநகர்: ரூ.500 பிரீமியத்தில் மாடுகளுக்கான இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை மத்திய அரசு அதிகரித்து வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்திட்டத்தில் இன்சூசூரன்ஸ் பிரீமியத்தில் ரூ.75 பயனாளரும், ரூ.425 மத்திய அரசும் செலுத்துகின்றது. விபத்து, பேரிடர், இயற்கை சீற்றங்களில் மாடுகள் பலியாகும் போது இழப்பீடாக ரூ.40 ஆயிரம் வரை பயனாளரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையே நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் அனைத்து கால்நடை வளர்ப்போரும் பயனடைய முடியாத நிலை நீடிக்கிறது. எனவே மத்திய அரசின் கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு திட்டத்திற்கான தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்து அதிக பயனாளிகள் பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.