உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாந்தோப்பு பெரிய வையம்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட எதிர்பார்ப்பு

மாந்தோப்பு பெரிய வையம்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட எதிர்பார்ப்பு

காரியாபட்டி: மாந்தோப்பு பெரிய வையம்பட்டி இடையே குண்டாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காரியாபட்டி மாந்தோப்பு ஊராட்சியில் உள்ள பெரிய வையம்பட்டிக்கு 3 கி.மீ., தூரம் உள்ளது. அங்கிருந்து கண்மாய் கரையில் நடந்தோ, டூவிலர்களிலோ செல்ல முடியும். கனரக வாகனங்கள் செல்ல முடியாது. சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட குண்டாற்றை கடந்து செல்ல முடியாது. டூவீலரில் செல்பவர்கள், கனரக வாகனங்கள், நடந்து செல்பவர்கள் என பலரும் பிசிண்டி, வடகரை, பாம்பாட்டி, பாஞ்சார் வழியாக 10 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். நேரம், பணம் விரையமாகிறது. பெரிய வையம்பட்டி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் மாந்தோப்புக்கு வந்து செல்வதால் கண்மாய் கரையில் ரோடு அமைத்து குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கண்மாய் கரையில் மெட்டல் ரோடு போடப்பட்டது. இருந்தும் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஆட்கள்,டூவீலர்களில் செல்ல முடிகிறது. காரியாபட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த வழியாக எளிதில் செல்ல முடியும். பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டியஅவசியம் கிடையாது. எனவே தார் ரோடு அமைத்து, குண்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை