உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் கூரை அமைக்க எதிர்பார்ப்பு

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் கூரை அமைக்க எதிர்பார்ப்பு

நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்ட் திறந்த வெளியாக இருப்பதால் வெயில், மழைக்கு பயணிகள் நிற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க கூரை அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.நரிக்குடியிலிருந்து மானாமதுரை, மதுரை சிவகங்கை, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமத்தினர் நரிக்குடி வந்து தான் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டும். நரிக்குடியில் ஏற்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. குடிநீர், இலவச கழிப்பறை வசதிகள் கிடையாது. பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. அதனைச் சுற்றி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். பயணிகள் உட்கார முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. வெயில், மழைக்கு அங்குள்ள கடை ஓரங்களில் ஒதுங்கினால், கடை உரிமையாளர்கள் முகம் சுளிக்கின்றனர். பயணிகள் மழை, வெயிலுக்கு திறந்தவெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூரை அமைக்க வேண்டும். தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி